/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
2 நாட்கள் விடுமுறை; பஸ், ரயில்களில் முன்பதிவு முடிவுக்கு வந்தது
/
2 நாட்கள் விடுமுறை; பஸ், ரயில்களில் முன்பதிவு முடிவுக்கு வந்தது
2 நாட்கள் விடுமுறை; பஸ், ரயில்களில் முன்பதிவு முடிவுக்கு வந்தது
2 நாட்கள் விடுமுறை; பஸ், ரயில்களில் முன்பதிவு முடிவுக்கு வந்தது
ADDED : ஏப் 02, 2024 04:15 AM
சேலம்: தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்.,19 வெள்ளிக்கிழமை நடக்கிறது. அன்றைய தினம் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதோடு, தனியார் நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க, தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. ஓட்டுப்பதிவுக்கு மறுநாள் ஏப்.,20 சனி, ஏப்.,21 ஞாயிறு என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. இந்த விடுமுறையை சொந்த ஊரில் கொண்டாட, தொழில் நகர பயணிகள் இப்போதே டிக்கெட்டுகளை முன்
பதிவு செய்து விட்டனர்.
இதன் காரணமாக சென்னை, பெங்களூரு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட தொழில் நகரங்களில் இருந்து தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர், துாத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் வழக்கமான ரயில்கள், ஆம்னி பஸ்கள், எஸ்.இ.டி.சி., பஸ்களில் முன்பதிவு ஏப்.,18 துவங்கி இரண்டு நாட்களுக்கும், மறுமார்க்கத்தில், ஏப்.,21, 22 ஆகிய நாட்களிலும் முடிவுக்கு வந்துள்ளது.
முன்பதிவு முடிவுக்கு வந்து விட்ட நிலையில், ஏப்,18 முதல் சிறப்பு பஸ்களை இயக்க அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

