/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
300 கேமரா, 600 விளக்குகள் ஓட்டு எண்ணும் மையம் தயார்
/
300 கேமரா, 600 விளக்குகள் ஓட்டு எண்ணும் மையம் தயார்
300 கேமரா, 600 விளக்குகள் ஓட்டு எண்ணும் மையம் தயார்
300 கேமரா, 600 விளக்குகள் ஓட்டு எண்ணும் மையம் தயார்
ADDED : ஏப் 19, 2024 02:19 AM
ஓமலுார்:சேலம் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று நடக்கிறது. ஆனால் ஓட்டு எண்ணிக்கை, ஜூன், 4ல் நடக்க உள்ளது.
இதனால்
ஓமலுார், இடைப்பாடி, வீரபாண்டி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம்
தெற்கு ஆகிய, 6 சட்டசபை தொகுதிகளில் பதிவாகும் மின்னணு
ஓட்டுப்பதிவு இயங்திரங்கள், இன்று இரவு, ஓட்டு எண்ணும் மையமான,
கருப்பூர் அரசு பொறியியல் கல்லுாரி வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டு,
அங்கு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட உள்ளன.
அந்த மையத்தில், 6
தனித்தனி கட்டடங்களில், 'ஸ்டிராங் ரூம்' அமைக்கப்பட்டு, முகவர்கள்
அமரும் பகுதியில் தற்போது இரும்பு தடுப்புகள், மூங்கில் தடுப்புகள்,
கட்டடம் முன் பிரமாண்ட மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.
ஓட்டு
எண்ணும் வளாகம் முழுவதும், 300 கண்காணிப்பு கேமராக்கள் பொரு
த்தப்பட்டுள்ளன. அவை அனைத்தும், 'டிவி'யில் கண்காணிக்கும்படி,
மெக்கானிக்கல் துறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இரவை பகலாக்கும்படி, 600க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

