/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தாட்கோவுக்கு தனி வங்கிதமிழரசன் வலியுறுத்தல்
/
தாட்கோவுக்கு தனி வங்கிதமிழரசன் வலியுறுத்தல்
ADDED : ஏப் 08, 2025 01:49 AM
தாட்கோவுக்கு தனி வங்கிதமிழரசன் வலியுறுத்தல்
சேலம்:''மத்திய, மாநில அரசுகள் இரண்டும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நலம் சார்ந்த அரசாக இல்லை,'' என, இந்திய குடியரசு கட்சி தலைவர் தமிழரசன், சேலத்தில் நிருபர் களிடம் கூறினார்.மேலும் அவர் கூறியதாவது: தமிழக சட்டசபையில், ஆதிதிராவிடர் நலத்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அப்போதுதான், ஆதிதிராவிடர்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; செலவிடப்பட்டுள்ளது என்பதை விவாதிக்க முடியும். அதை உடனடியாக செய்ய
முடியாவிட்டாலும், தாட்கோவுக்கு தனி வங்கி தேவை. அதை நடப்பு கூட்டத்தொடரிலேயே அறிவிக்க வேண்டும். வன்கொடுமை அதிகம் நடக்கும் மாநிலங்களில் தமிழகம், ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஆனால், அது தொடர்பாக வழக்குகள் பதியப்படுவதில்லை. தீர்வும் கிடைக்காது.
தி.மு.க., ஆட்சியில் ஆதிதிராவிட மக்களின் பிரச்னைகள், மனிதாபிமானத்துடன் அணுகப்படுவதில்லை. தி.மு.க., சமூகநீதி பேசியபடி, ஆதிதிராவிட மக்களுக்கு அநீதியை இழைத்து வருகிறது.
இவ்வாறு கூறினார்.

