/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உயரம் தாண்டுதலில் மாணவி புது சாதனை
/
உயரம் தாண்டுதலில் மாணவி புது சாதனை
ADDED : ஜூலை 23, 2025 02:04 AM
சேலம், சேலம் பெரியார் பல்கலையில், மாநில அளவில் மூத்தோர் தடகள விளையாட்டு போட்டி, கடந்த, 19, 20ல் நடந்தது. அதில், எம்.பி.ஏ., இறுதி ஆண்டு மாணவி கோபிகா, 22, என்பவர், 1.82 மீ., உயரம் தாண்டி, புது சாதனை படைத்தார்.
இதுகுறித்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளர் இளம்பரிதி கூறியதாவது:
கோபிகா, திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்தவர். 3 ஆண்டாக, சேலம் காந்தி மைதானத்தில் உள்ள, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சி மையத்தில் தங்கி, தனியார் கல்லுாரியில் படிக்கிறார்.
உயரம் தாண்டுதலில் இதுவரை, 1.81 மீ., தாண்டியதே அதிகபட்சம். அதை கோபிகா முறியடித்துள்ளார். இதன்மூலம் அவர், அடுத்த மாதம் சென்னையில் நடக்க உள்ள தேசிய போட்டிக்கு தேர்வாகியுள்ளார். அவர், இந்திய அளவில் உயரம் தாண்டுதலில், 2ம் இடத்தில் உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

