/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
மொபட் மீது பைக் மோதி இரு மூதாட்டியர் உயிரிழப்பு
/
மொபட் மீது பைக் மோதி இரு மூதாட்டியர் உயிரிழப்பு
ADDED : ஆக 08, 2025 01:16 AM
ராணிப்பேட்டை:மொபட் மீது பைக் மோதியதில், இரு மூதாட்டியர் உயிரிழந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த கனியனுாரை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி தாமோதரன், 50. இவரது மூன்று சக்கர மொபட்டில் நேற்று முன்தினம் மாலை அதே பகுதியை சேர்ந்த சரோஜா, 65, ஜெகதாம்பாள், 67, ஆகிய இருவரை அழைத்துக் கொண்டு, கலவை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது, திமிரி நோக்கி சென்ற அடையாளம் தெரியாத பைக், தாமோதரனின் மொபட் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இதில், தாமோதரன், சரோஜா, ஜெகதாம்பாள் மூவரும் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். ஜெகதாம்பாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சரோஜா மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். தாமோதரன், வேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கலவை போலீசார் விசாரிக்கின்றனர்.