/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
ரோப்கார் வளாகத்தில் பிளாஸ்டிக் குப்பை கழிவு
/
ரோப்கார் வளாகத்தில் பிளாஸ்டிக் குப்பை கழிவு
ADDED : நவ 15, 2024 08:31 PM

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது அமிர்தவல்லி தாயார் உடனுறை யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில். இந்த கோவிலின் எதிரே சின்ன மலையில், யோக அனுமன் அருள்பாலித்து வருகிறார்.
கடந்த மார்ச் மாதம், பக்தர்களின் பங்களிப்புடன், இங்கு ரோப்கார் வசதி ஏற்படுத்தப்பட்டது. மலையடிவாரத்தில் உள்ள ரோப்கார் வளாகத்தில், நுழைவாயில் பகுதியில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கின்றன.
மலைக்கோவில் அமைந்துள்ள கொண்டபாளையம் கிராமம், சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதி. மலைக்கோவில் பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க, நகராட்சி மற்றும் அறநிலைய துறை அதிகாரிகள், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

