/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் சபரிமலை விரைவு
/
தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் சபரிமலை விரைவு
ADDED : நவ 16, 2024 01:45 AM

அரக்கோணம்:கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலை அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. இங்கு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையை ஒட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவர். எனவே பக்தர்களின் பாதுகாப்பை கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள கேரள அரசு மற்றும் கோவில் தேவசம் வாரியம் கேட்டுக் கொண்டது.
அதன் படி, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை கமாண்டன்ட் அகிலேஷ் குமார் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் ஜே.கே.மண்டல் தலைமையில் 67 பேர் கொண்ட 2 குழு நேற்று கேரள விரைந்தனர்.
பாதுகாப்பு உபகரணங்கள், அதிநவீன தொலை தொடர்பு உபகரணங்கள், மருத்துவ முதலுதவி சிகிச்சைகளுக்கான உபகரணங்கள் மற்றும் பேரிடர் மீட்பு உபகரணங்களுடன் சென்றனர்.
இதில் ஒரு அணியினர் பம்பை நதிக்கரையிலும் மற்றொரு அணியினர் சன்னிதானம் பகுதியிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

