/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
முன்விரோத தகராறில் எலக்ட்ரீஷியன் படுகொலை
/
முன்விரோத தகராறில் எலக்ட்ரீஷியன் படுகொலை
ADDED : ஆக 06, 2025 10:47 PM
ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை அருகே, வீட்டில் துாங்கி கொண்டிருந்த எலக்ட்ரீஷியன், முன்விரோதத்தில் வெட்டி கொல்லப்பட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோ, 26, எலக்ட்ரீஷியன். இவருக்கு மனைவி, மகன் உள்ளனர். இளங்கோவின் மது பழக்கத்தால், மனைவி பிரிந்து சென்று விட்டார். இளங்கோ தன் பெற்றோர், மகனுடன் வசிக்கிறார்.
கடந்த, இரண்டு நாட்களுக்கு முன், அவரது அத்தை மகன் தனுஷ், 19, என்பவர், இளங்கோவிடம் மது போதையில் தகராறில் ஈடுபட்டார்; தனுஷ், கத்தியை காட்டி மிரட்டினார். இளங்கோ, ஆற்காடு போலீசில் தனுஷ் மீது புகார் அளித்தார்.
இதில் ஆத்திரமடைந்த தனுஷ், நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு வீட்டில் துாங்கி கொண்டிருந்த இளங்கோவை, வெட்டி கொலை செய்து தப்பினார். இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.