ADDED : ஆக 14, 2025 03:03 AM
இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்ட்'
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், தி.மு.க.,வை சேர்ந்த அஸ்வினி, 44. இவரது கணவர் சுதாகர், 48. இவர், அம்மனுாரை சேர்ந்த கட்டட தொழிலாளி அவினேஷ்குமார், 21, என்பவரின் தாயிடம் ஏற்பட்ட தகராறில் தரக்குறைவாக பேசியதால், ஆத்திரமடைந்த அவினேஷ்குமார் ஏப்., 19ல், சுதாகரை வெட்டினார். அரக்கோணம் டவுன் போலீசார், அவினேஷ்குமாரை கைது செய்தனர்.
ஜாமினில் வந்த அவினேஷ்குமார், சில வாரங்களாக, ரத்தினகிரி போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வந்தார். கடந்த, 10ல் கையெழுத்திட சென் றபோது, ரத்தினகிரி ஸ்டேஷன் அருகே அவினேஷ்குமார் வெட்டி கொல்லப்பட்டார். இச்சம்பத்தில், தி.மு.க., பிரமுகர் சுதாகர், அவரது மனைவியான தி.மு.க., ஒன்றிய பெண் கவுன்சிலர் அஸ்வினி உட்பட ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர்.
இக்கொலை வழக்கு தொடர்பாக, போதிய நடவடிக்கை எடுக்காமல், பணியில் மெத்தனம் காட்டியதாக, அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் தங்ககுருநாதனை, வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ராகார்க், நேற்று சஸ் பெண்ட் செய்து உத்தரவிட்டார்.