/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காதலன் வீட்டின் முன் இளம்பெண் தர்ணா
/
காதலன் வீட்டின் முன் இளம்பெண் தர்ணா
ADDED : டிச 22, 2025 09:53 AM

ராமநாதபுரம்: ஆந்திராவை சேர்ந்த இளம்பெண்நேற்றிரவு ராமநாதபுரத்தில் உள்ள காதலன் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஆந்திர மாநிலம் அனந்தபூரை சேர்ந்தவர் சரஸ்வதி 28. பெங்களூருவில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அங்கு அவருடன் பணிபுரியும் தோழி ஒருவரின் நண்பரான ராமநாதபுரத்தை சேர்ந்த கோபி 28, என்பவர் காதலித்து வந்துள்ளார். கோபி வேலுாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் தன்னை ஏமாற்றியதாக கூறி இளம்பெண் ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் உள்ள இளைஞரின் வீட்டின் முன்பு அமர்ந்து நேற்றிரவு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது கோபி தன்னை திருமணம் செய்வதாக கூறி விட்டு தற்போது ஏமாற்றிவிட்டதாகவும் கூறி அழுதார். கேணிக்கரை போலீசார் அவரை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர்.

