/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நேரம் தவறி செல்லும் அரசு பஸ் கிராம மக்கள் சிறைபிடித்தனர்
/
நேரம் தவறி செல்லும் அரசு பஸ் கிராம மக்கள் சிறைபிடித்தனர்
நேரம் தவறி செல்லும் அரசு பஸ் கிராம மக்கள் சிறைபிடித்தனர்
நேரம் தவறி செல்லும் அரசு பஸ் கிராம மக்கள் சிறைபிடித்தனர்
ADDED : டிச 13, 2025 05:19 AM

திருவாடானை: திருவாடானையிலிருந்து தினைக்காத்தான் வழியாக செல்லும் சாலை மோசமாக இருப்பதால் இவ்வழியாக செல்லும் டவுன் பஸ் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்வதில்லை. இதனால் கிராம மக்கள் பஸ்சை சிறைபிடித்தனர்.
திருவாடானையிலிருந்து தினைகாத்தான்வயல், நெய்வயல், நாச்சியேந்தல், அதங்குடி வழியாக தேவகோட்டைக்கு டவுன் பஸ் செல்கிறது. மாணவர்கள் மற்றும் பெரும்பாலான பயணிகள் இந்த பஸ்சை பயன்படுத்தி வருகின்றனர். சாலையின் மோசமான நிலை காரணமாக பஸ் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்வதில்லை. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் பெரும் அவதியடைகின்றனர்.
இந்நிலையில் நேற்று அந்த டவுன் பஸ்சை தினைக்காத்தான்வயல் கிராம மக்கள் சிறைபிடித்தனர். தேவகோட்டை பஸ்டெப்போ மேலாளருக்கு தெரிவிக்கப்பட்டது. சரியான நேரத்திற்கு பஸ் வரும் என்று மேலாளர் கூறியதால் பஸ் விடுவிக்கப்பட்டது. கண்டக்டர், டிரைவர் கூறியதாவது:
தினைகாத்தான்வயல் முதல் நெய்வயல் வரை பல இடங்களில் சாலையில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சாலையில் தினமும் பஸ்சை இயக்கி பயணிகளை ஏற்றி வருவது பெரும் சவாலாகவே உள்ளது. எனவே குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியவில்லை என்றனர்.
கிராம மக்கள் கூறுகையில், மழை காலத்துக்கு முன் சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது மழைக்காலம் துவங்கியுள்ளதால் சாலை மேலும் சேதமடைந்து வருகிறது. குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ் வராததால் சிரமப்படுகிறோம் என்றனர்.

