/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை குறித்து சர்ச்சைக்காட்சிகள் வைகை விவசாயிகள் சங்கம் கண்டனம்

ADDED : ஏப் 05, 2025 06:06 AM

ராமநாதபுரம்: எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை குறித்த சர்ச்சை காட்சிகள் தமிழகம், கேரள மாநிலங்களின் நல்லுறவை சீர்குலைப்பதாக இருப்பதாக தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்தனர்.
இதுகுறித்து ராமநாதபுரத்தில் தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் எம்.எஸ்.கே.பாக்கியநாதன் கூறியதாவது: முல்லைப்பெரியாறு அணை குறித்து தொடர்ந்து கேரள மாநிலத்தில் சர்ச்சை கருத்துக்களை வெளியிடுவது, போராட்டங்கள் நடத்துவது போன்ற தேவையற்ற பிரச்னைகளை உருவாக்கி வருகின்றனர். தற்போது திரைக்கு வந்துள்ள எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை குறித்து சர்ச்சை காட்சிகளை அமைத்துள்ளனர். இது தமிழகம், கேரளா மாநிலங்களுக்கிடையே உள்ள நல்லுறவை சீர்குலைக்கும் வகையில் உள்ளது.
தமிழகத்தில் இருந்து தான் கேரள மாநிலத்திற்கு அனைத்து அத்தியாவசியப்பொருட்களான பால் முதல் இறைச்சி, அரிசி உட்பட அனைத்து பொருட்களும் செல்கிறது. முல்லைப்பெரியாறு அணையை வைத்து சிலர் அரசியல் செய்து வருகின்றனர். இதுபோன்ற செயல்களால் முல்லைப்பெரியாறு அணை குறித்து சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வரும் அனைவருக்கும் வைகை விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
எம்புரான் படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சை காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும். எம்புரான் படத்தை தமிழகத்தில் திரையிட தடை செய்ய வேண்டும் என்றார்.