/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மும்பை சிறையில் இருந்துமூன்று மீனவர்கள் விடுதலை
/
மும்பை சிறையில் இருந்துமூன்று மீனவர்கள் விடுதலை
ADDED : பிப் 19, 2024 06:18 AM

ராமநாதபுரம் : அரபுநாடான குவைத்தில் மூன்றாண்டுகள் கொத்தடிமைகளாக இருந்த தமிழக மீனவர்கள் தப்பி வந்த போது மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது மீனவர்கள் தேசிய பாரம்பரியமீனவர்கள் கூட்டமைப்பினர் முயற்சியால் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டதால் மீனவர்களின் குடும்பத்தினர் மகிழ்சியடைந்தனர்.
தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி கூறியதாவது:
ராமேஸ்வரம் தங்கச்சிமடம் மீனவர் நெடிசோ, கன்னியாகுமரி மாவட்டம் கீழமணக்குடி மீனவர் அனீஷ், ஆரோக்கியபுரம் மீனவர் விஜய் ஆகியோர் அரபு நாடான குவைத்துக்கு மீன் பிடி தொழிலுக்காக சென்றவர்கள் 3 ஆண்டுகளாக அங்கு கொத்தடிமைகளாக நடத்தப்பட்டனர்.
இவர்களை மீட்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டது. 3 மீனவர்களும் உயிருக்கு பயந்து குவைத்தில் இருந்து சிறிய மீன் பிடி படகில் 10 நாட்கள்கடலில் 3000 கி.மீ., பயணித்து மும்பை தப்பி வந்தனர். அங்குள்ள போலீசார் அவர்களை கைது செய்து 5 நாட்கள் விசாரணைக்குப் பின் மும்பை சிறையில் அடைத்தனர்.
கன்னியாகுமரியை சேர்ந்த பசலையான், விஜய் வசந்த் எம்.பி., ஆகியோர் மேற்கொண்ட பல்வேறு சட்டப்போரட்டங்களின் மூலமாக 3 மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவரும் நேற்று (பிப்.,18) இரவு விமானம்மூலம் கொச்சின்வந்தனர். அங்கிருந்து கன்னியாகுமரி வந்தனர். மீனவர்கள் விடுதலைக்கு உதவிய அனைவருக்கும் நன்றி என்றார்.

