/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பொது மக்கள் மாதிரி ஓட்டளிக்கலாம்
/
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பொது மக்கள் மாதிரி ஓட்டளிக்கலாம்
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பொது மக்கள் மாதிரி ஓட்டளிக்கலாம்
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பொது மக்கள் மாதிரி ஓட்டளிக்கலாம்
ADDED : ஜன 21, 2026 05:21 AM
ராமநாதபுரம்: இவ்வாண்டு (2026) சட்டசபை தேர்தலை முன்னிட்டு பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று (ஜன.,21) முதல் கலெக்டர் அலுவலகம், பரமக்குடி, ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் செயல் விளக்கம் மையத்தில் பொது மக்கள் மாதிரி ஓட்டளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த மையங்கள் அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை, தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நாள் வரை செயல்படும். மேலும் ராமநாதபுரம், திருவாடானை, பரமக்குடி, முதுகுளத்துார் தொகுதிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ளடக்கிய நடமாடும் நான்கு வாகனங்கள் மூலம் ஜன., 25 முதல் காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை அனைத்து ஊரக, நகர்ப்புற பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் ஓட்டளிப்பு தொடர்பான விழிப்புணர்வு பெற்று, தாங்கள் பதிவு செய்த ஓட்டு உறுதித்தன்மை ஆகியவற்றை இச்செயல் விளக்க மையங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

