/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பிணவறை சாவியை தொலைத்ததால் பூட்டை கல்லால் உடைத்து திறப்பு
/
பிணவறை சாவியை தொலைத்ததால் பூட்டை கல்லால் உடைத்து திறப்பு
பிணவறை சாவியை தொலைத்ததால் பூட்டை கல்லால் உடைத்து திறப்பு
பிணவறை சாவியை தொலைத்ததால் பூட்டை கல்லால் உடைத்து திறப்பு
ADDED : மார் 10, 2024 03:58 AM

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை பிணவறை பணியாளர்கள் சாவியை தொலைத்ததால் பூட்டை கல்லால் உடைத்து திறந்தனர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் புதிய கட்டடத்தில் பிணவறை அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இந்நிலையில் பழைய கட்டத்தில் உள்ள கார் ெஷட் பகுதியில் பிணவறை செயல்பட்டு வருகிறது.
இங்கு ஒன்பது உடல்களை பாதுகாப்பதற்கான குளிர்சாதன வசதி செய்யப்பட்ட உறைகள் உள்ளன. இதில் குளிர்சாதன வசதி முழுமையாக செயல்படாமல் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பிணவறையில் பணி செய்த பணியாளர்கள் பிணவறை சாவியை தொலைத்து விட்டனர்.
நேற்று காலை பிணவறையில் உடலை பார்ப்பதற்காகவும், அடுத்து ஒரு உடலை பிணவறையில் வைப்பதற்காகவும் வந்தனர். பிணவறை சாவியை இரவு பணியில் இருந்தவர்கள் தொலைத்து விட்டனர்.
சாவியை தேடி அலைந்து கொண்டிருந்தால் விஷயம் வெளியே கசிந்துவிடும் என்பதால் பிணவறை பணியாளர் ஒருவர் பிணவறை பூட்டை கல்லால் அடித்து உடைத்துள்ளார். அதன் பிறகு தான் பிணவறைக்குள் செல்ல முடிந்தது. அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் இதனை கண்டு கொள்ள நேரமில்லை. இனி வரும் காலங்களிலாவது இது போன்று நடக்கமால் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

