/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மேம்பாட்டு செயல்திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம்

ADDED : டிச 19, 2025 05:15 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் 2025ம் ஆண்டில் நான்காம் காலாண்டிற்கான ஆதிதிராவிடர், பழங்குடியினர் மேம்பாட்டு செயல்திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது.
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். கடந்த மூன்றாம் காலாண்டு கூட்டத்தின் போது நலக்குழு உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அரசு அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். சமூகநீதி விடுதிகள் மற்றும் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் உள்ள அடிப்படை வசதிகள் தொடர்பாகவும், பிற துறைகளின் மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மக்களுக்கு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம், ஆதிதிராவிடர் நல விழிப்புணர்வு, கண்காணிப்புக் குழு கூட்டம் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கான கண்காணிப்புக் குழு கூட்டம், பற்றாளர் குழு ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன், மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் செல்வி மற்றும் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.