/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
/
மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : டிச 20, 2025 06:33 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் டூவீலர்களில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊர்வலத்தை ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி மெகபூப் அலிகான் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன் முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் மாவட்ட ஐ.டி.ஐ., மாணவர்கள் பலர் பங்கேற்று சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பாதகைகளுடன் ஊர்வலமாக சென்றனர்.
ஹெல்மெட் அணிய வேண்டும். பஸ் படிக்கட்டில் நின்று பயணம் செய்ய கூடாது என மாணவர்கள் கோஷமிட்டனர். டி- பிளாக், பாரதி நகர், குமரய்யா கோயில் வரை ஊர்வலமாக சென்றனர். நீதிமன்ற பணியாளர்கள், வழக்கறிஞர்கள், போக்குவரத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

