/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு கழிப்பறை தேவை திறந்தவெளியை நாடும் அவலம்

ADDED : ஏப் 18, 2025 05:34 AM
கடலாடி: கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான கழிப்பறை வசதி இல்லாததால் திறந்தவெளியை நாடும் அவல நிலை நீடிக்கிறது.
கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வகுப்புகள்உள்ளன. மாணவர்கள் 600க்கும் மேற்பட்டோர் கல்வி பயின்று வருகின்றனர். தலைமையாசிரியர் உட்பட 25 ஆசிரியர்கள் உள்ளனர். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள்கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
பெற்றோர் கூறியதாவது:
கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான குறைந்தளவு கழிப்பறை வளாகம் உள்ளது. ஆனால் மாணவர்களுக்கான கழிப்பறை வசதியுடன் கூடிய வளாக கட்டமைப்பு இல்லை. இதனால் இயற்கை உபாதையை கழிக்க அவசரத்திற்கு திறந்த வெளியை நாடும் அவல நிலை நீடிக்கிறது.
எனவே மாவட்ட கல்விதுறை அலுவலர்கள் பள்ளியை ஆய்வு செய்து மாணவர்களுக்கான மின் மோட்டார் வசதியுடன் கூடிய கழிப்பறை வளாகங்களை ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.