/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கடலில் மாயமான 2 மீனவர்களை மீட்க 'ஸ்டிரைக்'
/
ராமேஸ்வரம் கடலில் மாயமான 2 மீனவர்களை மீட்க 'ஸ்டிரைக்'
ராமேஸ்வரம் கடலில் மாயமான 2 மீனவர்களை மீட்க 'ஸ்டிரைக்'
ராமேஸ்வரம் கடலில் மாயமான 2 மீனவர்களை மீட்க 'ஸ்டிரைக்'
ADDED : டிச 21, 2025 03:26 AM
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கடலில் மூழ்கி மாயமான இரு மீனவர்களை கண்டுபிடிக்கக் கோரி நேற்று ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.
டிச.,6ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஆரோக்கிய கிறிஸ்டின் 31.
இவர் நடுக்கடலில் மீன்பிடித்த போது படகில் இருந்து நிலை தடுமாறி கடலுக்குள் விழுந்து மூழ்கினார். 14 நாட்கள் ஆகியும் மீனவர் கதி என்னவென்று தெரியாத சூழலில் மீனவரை தேடி கண்டுபிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும் நேற்று முன்தினம் ராமேஸ்வரம் கடற்கரையில் நிறுத்தி இருந்த விசைப்படகு இன்ஜின் இலையில் சிக்கி இருந்த கயிற்றை அறுக்க கடலுக்குள் இறங்கிய மீனவர் கணேசன் 48, கடலுக்குள் மூழ்கி காணாமல் போனார். இரு மீனவரையும் கண்டுபிடிக்க வலியுறுத்தி நேற்று காலை ராமேஸ்வரம் மீன்துறை டோக்கன் வழங்கும் அலுவலகத்தை இந்திய கம்யூ., மேதகு, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் செந்தில், இளங்கோ, மீனவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் முற்றுகையிட்டனர். இதனை வலியுறுத்தி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தினர்.

