/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளுக்கு நிழற்குடை வசதி
/
பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளுக்கு நிழற்குடை வசதி
பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளுக்கு நிழற்குடை வசதி
பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளுக்கு நிழற்குடை வசதி
ADDED : ஜூலை 20, 2025 10:56 PM

பரமக்குடி: பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளுக்கான நிழற்குடை வசதி செய்யப்படும் சூழலில் போலீசார் கண்காணிப்பும் அவசியமாகிறது.
மதுரை - ராமேஸ்வரம் ரயில் மார்க்கத்தில் பரமக்குடி ஸ்டேஷன் பிரதானமாக உள்ளது. இங்கு ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்வதுடன், வருடத்திற்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஸ்டேஷனை பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் ஸ்டேஷன் மேம்பாடு குறித்து தினமலர் நாளிதழ் தொடர்ந்து சுட்டிக்காட்டியது. தற்போது அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ஸ்டேஷன் புதுப்பிக்கும் பணி நடக்கிறது.
தொடர்ந்து ஸ்டேஷனில் மூன்று நடை மேடைகள் உள்ள நிலையில் முதல் நடைமேடை முழுவதும் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுகிறது. இதேபோல் அடுத்தடுத்த பகுதிகளிலும் நிழற்குடைகள் அமைக்கும் பணிகள் தொடர்கிறது.
ஆனால் ஸ்டேஷனில் காலை துவங்கி இரவு வரை பள்ளி, கல்லுாரி மாணவர்கள் போர்வையில் சிலர் அமர்ந்துள்ளனர். மேலும் உ.பா., பிரியர்கள் உட்பட சமூக விரோதிகளும் அமரும்படி உள்ளது.
இங்கு மானாமதுரை ரயில்வே போலீசார் அவ்வப்போது பணியில் இருக்கின்றனர்.
ஆனால் தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு இன்றி உள்ளதால் பெண் பயணிகள் உட்பட அனைவருக்கும் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது.
ஆகவே அதிகமான மக்கள் வந்து செல்லும் இந்த ஸ்டேஷனில் நிரந்தரமாக ரயில்வே மற்றும் டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

