நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சி.எஸ்.ஐ கல்வியியல் கல்லுாரியில் தெரு நாய்களிடமிருந்து தற்காத்துக் கொள்ளுதல் மற்றும் கல்லுாரி வளாகத்தை துாய்மையாக பராமரித்தல் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. தாளாளர் மனோகரன் மார்ட்டின் தலைமை வகித்தார். முதல்வர் ஆனந்த் முன்னிலை வகித்தார்.
சமூக ஆர்வலர், விழிப்புணர்வு பேச்சாளர் முரசொலி, தெரு நாய்களிடமிருந்து தற்காத்துக் கொள்ளுதல் பற்றி சிறப்புரையாற்றினார். மேலாண்மை நோடல் அதிகாரி ராஜுவ் நன்றி கூறினார்.

