/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேவிபட்டினம் நவபாஷாணத்தில் இன்று தை அமாவாசை நீராடல் சேதுக்கரையில் பாதுகாப்பு தீவிரம்

ADDED : பிப் 09, 2024 04:15 AM

தேவிபட்டினம்: தை அமாவாசையை முன்னிட்டு தேவிபட்டினம் நவபாஷாணத்தில் பக்தர்கள் புனித நீராடுவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தேவிபட்டினம் நவபாஷாணத்தில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்யவும், பல்வேறு தோஷ நிவர்த்தி வேண்டி பரிகார பூஜைகள் செய்யவும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் பல ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இன்று தை அமாவாசையில் பக்தர்கள் பாதுகாப்பாக நவபாஷாண கடலில் புனித நீராடும் வகையில் நவபாஷாண கடற்கரை பகுதியில் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக கம்பால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
சேதுக்கரை
ராமநாதபுரம் அருகே சேதுக்கரை சேதுபந்தன ஜெய் வீர ஆஞ்சநேயர் கோயில், கடற்கரைப் பகுதிகளில் பக்தர்கள் புனித நீராட உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சேதுக்கரை ஊராட்சி தலைவர் ஜம்ரூத் நிஷா, ஊராட்சி செயலர் பாண்டி ஆகியோர் கூறியதாவது:
பக்தர்கள் புனித நீராட ஏற்ற வகையில் கழிப்பறை வசதி, பெண்கள் உடை மாற்றும் அறை, மின்விளக்கு, இலவச மருத்துவ முகாம் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
திருப்புல்லாணி பி.டி.ஓக்கள் ராஜேந்திரன், ராஜேஸ்வரி முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு செய்தனர்.