/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கணினி பயிற்றுநர் இருப்பது போல பதிவு செய்து மத்திய அரசை ஏமாற்றுகிறது பள்ளிகல்வித்துறை கணினி அறிவியல் ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

ADDED : ஏப் 18, 2025 02:36 AM
ராமநாதபுரம்:மத்திய அரசின் நிதியை பெறுவதற்காக கணினி ஆசிரியர்கள் பணியில் இருப்பது போன்று இணையதளத்தில் பதிவு செய்வதாக தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வெ.குமரேசன் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்காக தனியாக நிதி வழங்குகிறது. தமிழக அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 10 கணினியும், மேல்நிலைப் பள்ளிகளில் 20 கணினியும் கொண்டு ஆய்வகங்களை நிறுவியுள்ளது. இங்கு கணினி பயிற்றுநர் நியமிக்க மாத ஊதியமும் மத்திய அரசு வழங்குகிறது. தமிழகத்தில் 8209 அரசு, அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளில் 96 சதவீதம் இல்லம் தேடி கல்வியில் பணிபுரிந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் அடிப்படைக் கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு மட்டுமே.
ஓரிரு மாத கம்ப்யூட்டர் சார்ந்த சான்றிதழ்களை வைத்துக் கொண்டு பணி நியமனம் செய்துள்ளனர். 60 ஆயிரத்தற்கு மேற்பட்ட கணினி அறிவியல் பாடத்தில் பி.எட்., பட்டம் பெற்றவர்கள் இருந்த போதிலும் கணினி பயிற்றுநர் பணிக்கு இவர்களை நியமிக்கவில்லை.
ஆசிரிய பயிற்றுநர்களுக்காக வந்த நிதியை அலுவலக பணிக்கு பயன்படுத்தி உள்ளனர். இதனை கண்டித்தும், கணினி அறிவியல் பாடத்தில் பி.எட்., பட்டம் பெற்றவர்களை நியமிக்கவும் வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறோம்.
அரசுப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் பாடம் தனியாக இல்லை. அதற்கு பாடவேளைகள் இல்லை என தகவல் உரிமை சட்டம் மூலம் கல்வித்துறை அலுவலர்களிடமிருந்து பதில் பெற்றுள்ளோம். இந்நிலையில் இல்லாத கணினி பயிற்றுநர்களை இருப்பதாக 'Uidais' இணையதளத்தில் பதிவு செய்து தமிழக பள்ளிக்கல்வித்துறை மத்திய அரசை ஏமாற்றி நிதி பெற்றுள்ளனர், என்றார்.