/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டில்லி சுற்றுலா பயணியிடம் ரூ.1.53 லட்சம் பறிமுதல்
/
டில்லி சுற்றுலா பயணியிடம் ரூ.1.53 லட்சம் பறிமுதல்
ADDED : மார் 21, 2024 01:33 AM

ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே புது டில்லியிலிருந்து சுற்றுலா வந்த பயணியிடம் ரூ.1.53 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
புது டில்லியிலிருந்து விக்ரம் டாலா என்பவர் ராமேஸ்வரம் பகுதிக்கு சுற்றுலா வந்தார். இவர் மதுரையில் வாடகை கார் எடுத்து ராமேஸ்வரம் வந்துள்ளார். சுற்றுலா தலங்களை பார்த்து விட்டு அவர் மதுரைக்கு திரும்பி சென்றார். அவரது கார் உச்சிப்புளி அருகே பருந்து கப்பற்படை தளம் பஸ் ஸ்டாப் அருகே சென்ற போது கீழக்கரை தாசில்தார் பழனிகுமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர்.
அப்போது முறையான ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ.ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 750 ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதனால் சுற்றுலா வந்த இடத்தில் செலவுக்கு பணம் இல்லாத நிலையில் விக்ரம் டாலா செய்வதறியாது திகைத்து நின்றது பரிதாபமாக இருந்தது.

