/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உத்தரகோசமங்கையில் இன்று மதியம் நடை அடைப்பு
/
உத்தரகோசமங்கையில் இன்று மதியம் நடை அடைப்பு
ADDED : செப் 07, 2025 03:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் பிரசித்தி பெற்ற சிவாலயமாக திகழ்கிறது. இங்கு நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளி மாநில மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக அதிக அளவில் வருகின்றனர்.
இந்நிலையில் இன்றைய தினம் இரவில் சந்திர கிரகணம் நிகழ இருப்பதால் மதியம் 2:00 மணி முதல் இன்று முழுவதும் கோயில் நடை அடைக்கப்படுகிறது. மறுநாள் செப்., 8 அதிகாலையில் பரிகார பூஜைகளுக்கு பிறகு வழக்கம்போல் கோயில் நடை திறக்கப்பட உள்ளது.