/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மழையால் பச்சை பசேல் என மாறிய நெல் வயல்கள்
/
மழையால் பச்சை பசேல் என மாறிய நெல் வயல்கள்
ADDED : அக் 23, 2025 04:20 AM

விவசாயிகள் மகிழ்ச்சி
ஆர்.எஸ்.மங்கலம்: மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் நெற்பயிர்கள் பச்சை பசேல் என மாறியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் உட்பட பல்வேறு பகுதிகளிலும் கடந்த மாதம் பருவமழையை எதிர்பார்த்து நெல் விதைப்பு செய்யப்பட்டது. நெல் விதைப்பு செய்து 20 நாட்கள் கடந்த நிலையிலும் நெல் முளைப்புக்கு ஏற்ற பருவமழை இல்லாததால் நெல் விதைப்பு செய்த விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். ஒரு வாரமாக மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் ஆர்.எஸ். மங்கலம், திருவாடானை, நயினார் கோயில், பரமக்குடி, முதுகுளத்துார் உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர்கள் முளைத்துள்ளன.
இந்நிலையில், சில பகுதிகளில் நெற்பயிர்கள் முளைத்து வரும் நிலையில் அதிகளவில் வயல்களில் தண்ணீர் தேங்கியதால் நெல் பயிர்கள் முளைப்பதில் சிக்கல் ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டும் உள்ளனர். இருப்பினும் பெரும்பாலான பகுதிகளில் மழையால் நெற்பயிர்கள் முளைத்து பச்சை பசேல் என மாறியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குறிப்பாக, மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக திகழும் திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரங்களில் நெற்பயிர்கள் முளைத்து வளர்ச்சி நிலையில் உள்ளது.