/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பிரதமர் மோடி வருகையால் ராமேஸ்வரத்தில் கட்டுப்பாடுகள்
/
பிரதமர் மோடி வருகையால் ராமேஸ்வரத்தில் கட்டுப்பாடுகள்
பிரதமர் மோடி வருகையால் ராமேஸ்வரத்தில் கட்டுப்பாடுகள்
பிரதமர் மோடி வருகையால் ராமேஸ்வரத்தில் கட்டுப்பாடுகள்
ADDED : ஏப் 06, 2025 02:25 AM
ராமநாதபுரம்,:ரூ.550 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட பாம்பன் புதிய ரயில் பாலத்தின் திறப்பு விழாவிற்கு இன்று(ஏப்..6) பிரதமர் மோடி வருவதை முன்னிட்டு ராமேஸ்வரத்திற்கு காலை 11:00 முதல் மதியம் 3:00 மணி வரை போக்குவரத்துநிறுத்தப்படுகிறது. சுவாமி தரிசனத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி இலங்கை அனுராதபுரத்தில் இருந்து இன்று காலை 10:40 மணிக்கு ராணுவ ெஹலிகாப்டரில் புறப்படுகிறார். மண்டபம் ெஹலிபேடுக்கு 11:45 க்கு வருகிறார். அங்கிருந்து ரோடு மார்க்கமாக பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்திற்கு மதியம் 12:00 மணிக்கு வருகிறார்.
அங்கு மேடையில் நின்றபடி புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைத்து புதிய ரயில் போக்குவரத்தை கொடியசைத்து துவக்கி வைக்கிறார். 12:25 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு 12:40 மணிக்கு செல்கிறார்.
மதியம் 1:15 மணி வரை சுவாமி தரிசனம் செய்து சிறப்பு பூஜையில் பங்கேற்கிறார். 1:20க்கு அங்கிருந்து புறப்பட்டு விழா நடக்கும் சுற்றுலா மாளிகை வளாக மேடைக்கு 1:30 க்குசெல்கிறார். அங்கு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். நிறைவு பெற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
அங்கிருந்து 2:35க்கு புறப்பட்டு 2:55 மண்டபம் ெஹலிபேடுக்கு வருகிறார். ெஹலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு மதியம் 3:55 மணிக்கு செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு இரவு 7:20க்கு சென்றடைகிறார்.
கட்டுப்பாடுகள்
பிரதமர் வருகையால் இன்று காலை 11:00 மணி முதல் மாலை 3:00 வரை ராமேஸ்வரத்திற்கு போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. நகருக்குள் அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்படும். அவசர சேவைகள் மட்டும் தொடரும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இன்று காலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 5:00 முதல் 6:00 மணி வரை ஸ்படிக லிங்க பூஜை நடைபெறும். தொடர்ந்து ஆறு கால பூஜைகள் நடக்கும். காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை.
மாலை 3:30 மணிக்கு மேல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்,என ராமநாத சுவாமி கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

