/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புதிய இரண்டு ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்க முதல்வரிடம் கோரிக்கை
/
புதிய இரண்டு ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்க முதல்வரிடம் கோரிக்கை
புதிய இரண்டு ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்க முதல்வரிடம் கோரிக்கை
புதிய இரண்டு ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்க முதல்வரிடம் கோரிக்கை
ADDED : அக் 04, 2025 03:38 AM
ராமநாதபுரம்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கமுதி, கடலாடி, முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து புதிதாக இரு ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும் என ராமநாதபுரம் வந்த முதல்வர் ஸ்டாலினிடம் மனு அளித்தனர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாநில செயலாளர் விஜயகுமார் தலைமையில் நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடலாடி, கமுதி, முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றியங்களில் அதிகப்படியான கிராமங்கள் உள்ளன. அவற்றை பிரித்து புதிய இரு ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
மாவட்ட தலைவர் முனியராஜ், செயலாளர் ராமநாதன், பொருளாளர் மன்சூர், மாநில செயற்குழு உறுப்பினர் திருமுருகன், துணைத்தலைவர் சத்தியகிரி, இணைச் செயலாளர் செந்தில் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
இதே போன்று ராமநாதபுரம் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதில், தொலைக்காட்சிகளில் பணிபுரியும் செய்தியாளர்களுக்கும் தமிழக அரசு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

