/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பள்ளி செல்லும் வழியில் சேதமடைந்த பாலத்தை சீரமைக்க கோரிக்கை
/
பள்ளி செல்லும் வழியில் சேதமடைந்த பாலத்தை சீரமைக்க கோரிக்கை
பள்ளி செல்லும் வழியில் சேதமடைந்த பாலத்தை சீரமைக்க கோரிக்கை
பள்ளி செல்லும் வழியில் சேதமடைந்த பாலத்தை சீரமைக்க கோரிக்கை
ADDED : ஏப் 08, 2025 05:45 AM

ராமநாதபுரம்: திருவாடானை தாலுகா ஓரிக்கோட்டையில் உள்ள அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி, ஊராட்சி அலுவலகம் ஆகிய இடங்களுக்கு செல்லும் ஒரே பாதையில் சேதமடைந்துள்ள துாம்பு பாலத்தை சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
ஓரிக்கோட்டை ஊராட்சி மக்கள் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் மாவட்ட பொறுப்பாளர் சந்தானமேரி தலைமையில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதில், ஓரிக்கோட்டையில் உள்ள அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி, அதனை சுற்றி ஊராட்சி அலுவலகம், நுாலகம், பொதுகழிப்பிடம் அமைந்துள்ளது.
இவ்விடங்களுக்கு செல்லும் துாம்பு பாலம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு தற்போது சேதமடைந்துள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பிற இடங்களுக்கு செல்லும் முதியவர்கள், மக்கள் விபத்து அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது.
எனவே மாணவர்கள், பொதுமக்கள் நலன் கருதி உடைந்து கிடைக்கும் துாம்பு பாலத்தை சரி செய்து, சாலை அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.