/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கலாம் பெயர் வைக்க கோரிக்கை
/
கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கலாம் பெயர் வைக்க கோரிக்கை
கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கலாம் பெயர் வைக்க கோரிக்கை
கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கலாம் பெயர் வைக்க கோரிக்கை
ADDED : டிச 22, 2025 05:11 AM
கீழக்கரை: கீழக்கரை அரசு தாலுகா மருத்துவமனைக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயர் வைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கீழக்கரை தாலுகா மருத்துவமனையில் புதிய கட்டடம் மற்றும் விரிவாக்க கட்டமைப்பு வசதிகளுக்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது.
ரூ. 9 கோடியில் கட்டப்பட்டு வரும் கீழக்கரை அரசு தாலுகா மருத்துவமனைக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயர் வைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
கீழக்கரையைச் சேர்ந்த தமிழ்நாடு கட்டுமான உடல் உழைப்பு தொழிலாளர்கள் நல மத்திய ஐக்கிய சங்கத்தின் தலைவர் அபூபக்கர் சித்திக் கூறியதாவது:
ரூ. 9 கோடியில் கீழக்கரையில் தாலுகா மருத்துவமனை நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. மருத்துவமனைக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயர் வைக்க வேண்டும். இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கீழக்கரை நகர் பகுதிகளில் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு நோட்டீஸ் வழங்கி வருகிறேன்.
சென்னையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனருக்கு மனு அனுப்பி உள்ளேன் என்றார்.

