/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கமிஷன் கடைகளில் ஒரிஜினல் ரசீது வழங்க கோரிக்கை
/
கமிஷன் கடைகளில் ஒரிஜினல் ரசீது வழங்க கோரிக்கை
ADDED : மார் 15, 2024 11:33 PM

பரமக்குடி : பரமக்குடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகள், வியாபாரிகளுடன் கலந்துரையாடல் நடந்தது.
வேளாண் விற்பனை குழு செயலாளர் ராஜா தலைமை வகித்தார். வேளாண் வணிகம் துணை இயக்குனர் மோகன்ராஜ், வேளாண் அலுவலர் உலகுசுந்தரம், ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் கேசவன், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், வியாபாரிகள், கமிஷன் கடை நிர்வாகிகள் பங்கேற்றனர். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மலைச்சாமி கூறிய போது: கமிஷன் கடைகளில் விவசாயிகள் கொண்டு செல்லும் நெல், பருத்தி, மிளகாய் என அனைத்திற்கும் 8 சதவீதம் கமிஷன் வாங்குகின்றனர். 5 சதவீதம் கமிஷன் வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பருத்தி கொள்முதல் செய்ய வியாபாரிகள், வேளாண் விற்பனை அலுவலர்கள் கொண்ட குழு அமைக்க வேண்டும். கமிஷன் கடைகளில் ஒரிஜினல் ரசீது வழங்க வேண்டும் என்றார்.

