ADDED : மார் 15, 2024 10:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடல் நேற்று அதிகாலை 5:00 மணி முதல் 100 மீ., உள்வாங்கியது. பாறைகள் வெளியில் தெரிந்தன. குழியில் தேங்கி கிடந்த கடல்நீரில் மீன் குஞ்சுகள், சிப்பிகள் தத்தளித்தன. இதனை கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மதியம் 2:00 மணிக்கு பின் கடல்நீர் மட்டம் உயர்ந்தது இயல்பு நிலை திரும்பியது. கோடை காலம் துவங்கியதால் மார்ச் முதல் மே வரை அக்னி தீர்த்த கடல் பகுதி உள்வாங்குவதும், பின் இயல்பு நிலைக்கு திரும்புவதும் சகஜம் என மீனவர்கள் தெரிவித்தனர்.

