ADDED : டிச 21, 2025 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி 11வது வார்டு கலைஞர் வீதியில் ஒரு வாரத்திற்கும் மேலாக குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்திருந்தது. குடியிருப்பு வாசிகள் பேரூராட்சி நிர்வாகத்திடம் மழை நீரை வெளியேற்ற தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி உத்தரவின் பேரில் பேரூராட்சி ஊழியர்கள் தண்ணீர் செல்லும் வாய்க்காலில் இருந்த அடைப்புகளை சரி செய்து தண்ணீரை வெளியேற்றினர்.
இதே போன்று மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த தண்ணீரை வெளியேற்றும் விதமாக, பேரூராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்பில் உள்ள வாய்க்கால்களை சீரமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

