/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொழில் முனைவோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
/
தொழில் முனைவோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
தொழில் முனைவோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
தொழில் முனைவோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ADDED : டிச 23, 2025 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட தொழில் மையம் சார்பில் குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தொழிற்கடன் வசதியாக்கல் முகாம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர், மேம்பாட்டுத் திட்டம், கைவினைத் திட்டம் மற்றும் சுயவேலைவாய்ப்புத் திட்டத்தில் ரூ.1 கோடியே 67 லட்சம் வங்கி கடன் ஒப்பளிப்பு ஆணைகளை 28 பேருக்கு கலெக்டர் வழங்கினார்.
மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரிபுர சுந்தரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட வங்கி அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்றனர்.