/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொண்டி பெருமாள் கோயிலில் அன்னதான கூடம் கட்ட திட்டம்
/
தொண்டி பெருமாள் கோயிலில் அன்னதான கூடம் கட்ட திட்டம்
தொண்டி பெருமாள் கோயிலில் அன்னதான கூடம் கட்ட திட்டம்
தொண்டி பெருமாள் கோயிலில் அன்னதான கூடம் கட்ட திட்டம்
ADDED : டிச 11, 2024 06:05 AM
திருவாடானை : தொண்டி உந்திபூத்த பெருமாள் கோயிலில் அன்னதானம் கூடம் கட்டப்படும் என ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி கூறினார்.திருவாடானை பகுதியில் உள்ள கோயில்களை ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி பார்வையிட்டார். முன்னதாக திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ரூ.2 கோடியில் நடைபெறும் பல்வேறு பணிகளை பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் முடி ஏலம் நடத்துவது சம்பந்தமாக ஆய்வு செய்தார். அதன் பின் தொண்டி உந்திபூத்த பெருமாள் கோயிலில் சேதமடைந்த சுற்றுச் சுவர் கட்டும் பணிகளை பார்வையிட்டார். அவர் கூறியதாவது:
தொண்டி உந்திபூத்த பெருமாள் கோயிலில் மழையால் சுற்றுச்சுவர் சேதமடைந்தது. சுவற்றை சீரமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. 10 நாட்களுக்குள் பணிகள் துவங்கும். இக்கோயில் அருகே அன்னதான கூடம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கோயிலுக்கு சொந்தமான இடம் கையகப்படுத்தபட்டு பணிகள் துவங்கும் என்றார்.

