/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் புது பஸ்டாண்ட் திறந்த 10 நாட்களில் இருளில் மூழ்கியது; மின்விளக்குகள் எரியாததால் பயணிகள் பரிதவிப்பு

ADDED : அக் 23, 2025 04:34 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்டில் ரூ.20 கோடியில் விரிவாக்க பணிகள் முடிந்து அக்.,3ல் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் சரிவர பராமரிப்பின்றி 2 நாட்களாக மின் விளக்குகள் எரியாமல் இருளில் மூழ்கியதால் பயணிகள் பரிதவித்தனர். மாவட்ட தலைநகரான ராமநாதபுரம் நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை, துாத்துக்குடி, கும்பகோணம், புதுக்கோட்டை ஆகிய வெளி மாவட்டங்கள், உள்ளூர் பகுதிகளுக்கு 300க்கு மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. கட்டடம் பழுது, போதிய இடவசதியின்மை காரணமாக 2023 ஆக.,3 ல் ரூ.20 கோடியில் புதிய பஸ் ஸ்டாண்ட் 16,909 சதுர அடியில் கட்டுமான பணிகள் துவங்கியது.
ஓராண்டில் விரிவாக்கப்பணிகள் முடிந்து ராமநாதபுரத்திற்கு வந்த முதல்வர் ஸ்டாலின் அக்.,3ல் திறந்து வைத்தார். அதன் பிறகும் தொடர்ந்து வேலைகள் பார்த்து அக்.,8 ல் பஸ் போக்குவரத்து துவங்கியது.
இருப்பினும் சரிவர பராமரிப்பு இல்லாததால் பயணிகள் சிரமப்படுகின்றனர். குறிப்பாக பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்குள் மின்விளக்குகள் சரிவர பராமரிக்கப் படாமல் தொடர் மழையால் பழுதாகி கடந்த இரு நாட்களாக எரிவது இல்லை. பஸ் ஸ்டாண்ட் வளாகத்தை இருள் சூழ்ந்துள்ளதால் பயணிகள் திருட்டு அச்சத்தில் உள்ளனர். எனவே உடனடியாக பழுதான மின்விளக்குகளை சரிசெய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து நகராட்சி கமிஷனர் அஜிதா பர்வின் கூறுகையில், புகார் எதுவும் வரவில்லை. மழை பெய்து வருதால் 'சென்சார்' சரிவர இயங்காமல் மின்விளக்குகள் எரியாமல் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.