/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போலீஸ் நற்சான்று பெறுவதில் சிக்கல் யாத்திரை பணியாளர்கள் வேதனை
/
போலீஸ் நற்சான்று பெறுவதில் சிக்கல் யாத்திரை பணியாளர்கள் வேதனை
போலீஸ் நற்சான்று பெறுவதில் சிக்கல் யாத்திரை பணியாளர்கள் வேதனை
போலீஸ் நற்சான்று பெறுவதில் சிக்கல் யாத்திரை பணியாளர்கள் வேதனை
ADDED : டிச 18, 2025 05:24 AM
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்களுக்கு தீர்த்தம் இறைத்து ஊற்றும் யாத்திரை பணியாளர் சங்க உறுப்பினர்கள் 425 பேருக்கு கோயில் நிர்வாகம் இரு மாதங்களாக ஈவுத்தொகை வழங்கவில்லை என யாத்திரை பணியாளர் சங்கத்தினர் தெரிவித்தனர். இதற்கு கோயில் இணை ஆணையர் செல்லத்துரை மறுப்பு தெரிவித்தார்.
அவர் அனுப்பிய கடிதத்தில், கோயில் பாதுகாப்பு கருதி தீர்த்தம் இறைக்கும் பணியாளர்களின் ஆதார் அட்டை, வருகை பதிவேடு நகல் மற்றும் போலீசாரின் நற்சான்றிதழ் வழங்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து நேற்று யாத்திரை பணியாளர் சங்க தலைவர் பாஸ்கரன் கூறியதாவது :
இங்குள்ள 425 பணியாளர்களின் ஆதார் அட்டை, வருகை பதிவேடு நகல்கள் ஏற்கனவே கோயில் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளது. நற்சான்று கேட்டு போலீசாரிடம் மனு கொடுத்தும் சர்வர் பிரச்னையால் 425 பேருக்கும் கிடைப்பதில் சிக்கல் உள்ளதாக போலீசார் கூறுகின்றனர். மேலும் பிற பணிகளால் விரைவாக நற்சான்று வழங்குவதில் சிக்கல் உள்ளது என போலீசார் கூறினர்.
எனவே பணியாளர்களின் குடும்ப நலன் கருதி நற்சான்று வழங்குவதில் கூடுதல் கால அவகாசம் வழங்கி, தற்போது நிலுவையில் உள்ள ஈவுத்தொகை வழங்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேதனை தெரிவித்தார்.

