/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கும்பரம் கிராமத்தில் விமான நிலையம் அமைக்க கூாடது: மக்கள் வலியுறுத்தல்

ADDED : டிச 23, 2025 05:35 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே கும்பரம் கிராமத்தில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். அதற்கு உயர் அதிகாரிகள் எழுத்துப் பூர்வமாக உத்தரவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
கும்பரம் கிராம பொது மக்கள் சார்பில் ஊர் நிர்வாகிகள், பெண்களுடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர். கும்பரம் கிராம மக்கள் கூறியதாவது:
எங்கள் கிராமத்தில் பல லட்சம் பனை, தென்னை மரங்கள் உள்ளன. நெல் விவசாயம் நடக்கிறது. இவற்றை அழித்து விமான நிலையம் அமைக்க விடமாட்டோம். கும்பரத்தில் விமான நிலையம் வராது என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இது போன்று சில மாதங்களுக்கு முன்பும் சொன்னார்கள். அதன் பிறகும் சில அதிகாரிகள் கிராமத்தில் நிலங்களை ஆய்வு செய்துள்ளனர். எனவே கும்பரம் கிராமத்தில் விமான நிலையம் அமைக்கப்படாது என எழுத்துப் பூர்வமாக உயர் அதிகாரிகள் உறுதியளிக்க வேண்டும்.
இல்லையென்றால் எங்களது வாக்காளர் அட்டையை டிச.,29ல் கலெக்டரிடம் ஒப்படைத்து காத்திருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றனர்.