ADDED : மார் 15, 2024 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே குயவன்குடியில் உள்ள குமரகுருபரசுப்பையா சாது, சுப்பிரமணிய சுவாமி கோயிலில்காப்புக்கட்டுதல் உடன் பங்குனி உற்ஸவ விழா துவங்கியுள்ளது.
நேற்று காலை 9:00மணிக்கு சுப்பிரமணியசுவாமி கோயில்,குயன்வடி, அபிேஷகம், அலங்காரத்தில் பூஜையுடன், காப்புக்கட்டுதல் நடந்தது. தினமும் மாலை 6:00 மணிக்கு திருப்புகழ், திருவாசகம் பாராயண நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 24ல் பவுர்ணமி அன்று இரவு பூ வளர்க்கும் பூஜை, அக்னிசட்டிகள் எடுத்தல் பூக்குழி இறங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மறுநாள் மார்ச் 26அதிகாலை வரை நடக்கிறது. மார்ச் 24 வரை தினமும் மதியம்அன்னதானம் வழங்கப்படுகிறது.

