/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிராமங்களுக்கு ஓட்டை உடைசல் பஸ் இயக்கம்
/
கிராமங்களுக்கு ஓட்டை உடைசல் பஸ் இயக்கம்
ADDED : பிப் 08, 2024 06:44 AM

ராமநாதபுரம், : ராமநாதபுரத்தில் இருந்து கிராமங்களுக்கு இயக்கப்படும் ஓட்டை உடைசலான பழைய பஸ்கள் அடிக்கடி பழுதாகி, பஞ்சராகி நடுவழியில் நின்று விடுவதால் பயணிகள் தவிக்கின்றனர்.
ராமநாதபுரம் அரண்மனை, பழைய பஸ்ஸ்டாண்ட் ஆகிய இடங்களிலில் இருந்து தினமும் கிராமங்களுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக பெண்களுக்கு இலவசம் என்பதால் மினி பஸ், தனியார் பஸ்களை விட்டு விட்டு அரசு பஸ்சில் பயணம் செய்ய பெண்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில் பெரியபட்டினம், புதுமடம், திருப்புல்லாணி, தேவிப்பட்டினம், அழகன்குளம் உள்ளிட்ட இடங்களுக்கு பழைய ஓட்டை உடைசல் பஸ்களை இயக்குவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
நேற்று முன்தினம் காலை அரண்மனையிலிருந்து புதுமடத்திற்கு செல்லும் வழியில் 7ம் எண் டவுண் பஸ் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பஞ்சராகிநடுரோட்டில் நின்றது.
இதனால் பயணிகள் மாற்று பஸ்சிற்காக காத்திருந்து சிரமப்பட்டனர். எனவே கிராமங்களுக்கு நல்ல நிலையில் உள்ள பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.

