ADDED : அக் 04, 2024 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் செட்டியமடை பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.
தி.மு.க., ஒன்றிய செயலாளர் மோகன் தலைமை வகித்தார். நகர் செயலாளர் கண்ணன், வட்ட வழங்கல் அலுவலர் ஹேமாவதி முன்னிலை வகித்தனர்.
மாவட்ட வழங்கல் அலுவலர் இளங்கோ புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. வார்டு கவுன்சிலர் பாலகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர் தென்றல் ஜலில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

