ADDED : அக் 17, 2024 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதி அருகே சென்னை சென்ற ஸ்ரீ கிருஷ்ணா ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கன்னிராஜபுரத்தில் இருந்து முதுகுளத்துார், கமுதி, மானாமதுரை வழியாக சென்னைக்கு தனியார் ஆம்னி பஸ் இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் முதுகுளத்துார், கமுதி வழியாக வந்த தனியார் ஆம்னி பஸ் உலகநடை அருகே கவிழ்ந்தது. பயணிகள் காயங்களுடன் உயிர் தப்பினர். பயணி விக்னேஷ் 26, அளித்த புகாரில் பஸ் டிரைவர் கன்னிராஜபுரம் பொன்முருகன் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

