/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நாளை புதிய பஸ் ஸ்டாண்ட் கடைகள் ஏலம்; டி.டி., வாங்க ஆளில்லை: வியாபாரிகள் புகார்
/
நாளை புதிய பஸ் ஸ்டாண்ட் கடைகள் ஏலம்; டி.டி., வாங்க ஆளில்லை: வியாபாரிகள் புகார்
நாளை புதிய பஸ் ஸ்டாண்ட் கடைகள் ஏலம்; டி.டி., வாங்க ஆளில்லை: வியாபாரிகள் புகார்
நாளை புதிய பஸ் ஸ்டாண்ட் கடைகள் ஏலம்; டி.டி., வாங்க ஆளில்லை: வியாபாரிகள் புகார்
ADDED : ஜூலை 15, 2025 10:54 PM

ராமநாதபுரம்; ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகள் நாளை (ஜூலை 17) ஏலம் விடப்பட உள்ள நிலையில் அதற்கு விண்ணப்பிக்க வருபவர்களிடம் டி.டி., வாங்க கூட ஆளில்லை என வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் ரூ.20 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டு 85 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்படுகிறது. நாளை (ஜூலை 17 ) பொது ஏலமிடப்பட உள்ளன. இதற்கான ஜூன் 30 ல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இருப்பினும் கடைக்கான ஏலத்தில் பங்கேற்க டி.டி.,யுடன் வரும் விண்ணப்பதாரர்களை நகராட்சி நிர்வாகம் அலைகழித்து வருகிறது. மேலும் பஸ் ஸ்டாண்ட் கடைகளுக்கு சிலர் பல லட்சம் ரூபாய் வரை பேரம் பேசுவதாகவும் கூறுகின்றனர். இந்நிலையில் 2 நாட்களாக டி.டி., வாங்க கூட ஆளில்லை என ஏலத்தில் பங்கேற்க வந்தவர்கள் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து பொன்.கரு ரஜினிகாந்த், முத்துமுருகன் ஆகியோர் கூறுகையில், புதிய பஸ் ஸ்டாண்ட் கடைகள் டெண்டர் விடுவது ரகசியமாகவே உள்ளது.
இருந்தும் பலர் டி.டி.,யுடன் ஏலத்தில் பங்கேற்க விண்ணப்பிக்க வருகிறோம். ஆனால் 2 நாட்களாக கமிஷனர், மேலாளர் இருப்பது இல்லை. அவர்கள் வெளியே சென்றுள்ளதாக கூறுகின்றனர்.
அவர்களுக்கு பதிலாக மாற்று நபர்களையும் நியமிக்கவில்லை. ஆளுங்கட்சியினருக்கு தேவையானவர்களுக்கு கடைகளை ஒதுக்க திட்டமிட்டு சதி செய்கின்றனர். கமிஷனரை தொடர்பு கொள்ள முடியவில்லை. நாளை (இன்று) மதியம் 3:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆனால் ஒப்பந்தபுள்ளியை போடுவதற்கான பெட்டிகூட வைக்க வில்லை. எனவே சட்டவிதிகளுக்கு உட்பட்டு செயல்பட்டு பொது ஏலமிட வேண்டும் என்றார். இதுகுறித்து நகராட்சி கமிஷனர் அஜிதா பர்வினை அலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவர் எண் 'பிசி' ஆகவே இருந்தது.

