/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அங்காள ஈஸ்வரி அம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவம்
/
அங்காள ஈஸ்வரி அம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவம்
ADDED : அக் 23, 2024 04:34 AM

சாயல்குடி : சாயல்குடியில் உள்ள அங்காள ஈஸ்வரி அம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவம் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 117 வது ஜெயந்தி, 62 வது குருபூஜை விழா நடந்தது.
அங்காள ஈஸ்வரி அம்மன் கோயிலில் அக்.15ல் காப்பு கட்டுதலுடன் விழா துங்கியது. நேற்று காலை 9:00 மணிக்கு அங்காள ஈஸ்வரி அம்மன் கோயிலில் இருந்து பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு பால்குடம் எடுத்து வந்து அபிஷேக ஆராதனைகள் நடந்தது.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு முளைப்பாரி ஊர்வலம் நகரின் முக்கிய வீதியில் வலம் வந்தது.
மூலவர் விநாயகர், அங்காள ஈஸ்வரி அம்மன், குருநாதர், முத்துஇருளப்பசாமி, அக்னி வீரபத்திரசாமி, பாலமுருகன், கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது.

