ADDED : பிப் 09, 2024 04:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே தெற்கு தரவையைச் சேர்ந்த மாரியப்பன் வேலி அமைத்து அதில் வெள்ளாடுகள் வளர்க்கிறார். பிப்.2ல் ஆட்டோவில் மர்ம நபர் ஒரு ஆட்டை ஏற்றுவதை மாரியப்பன் கவனித்தார். அவரை விரட்டியும் பிடிக்க முடியவில்லை.
ஆட்டோ பதிவு எண்ணை குறித்து வைத்து போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் ஆட்டை திருடிய ராமநாதபுரம் பாம்பூரணியை சேர்ந்த சீனி உசேன் மகன் முகமது இப்ராகிம் 23, கேணிக்கரை போலீசார் கைது செய்தனர்.

