/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மகா சிவராத்திரி திருவிழா சிறப்பு பஸ்கள் இயக்கம்
/
மகா சிவராத்திரி திருவிழா சிறப்பு பஸ்கள் இயக்கம்
ADDED : மார் 08, 2024 12:42 PM
ராமநாதபுரம்: மாசி மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு மார்ச் 7 முதல் 10 வரை கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மார்ச் 8ல் மஹா சிவராத்திரியை முன்னிட்டு சென்னை, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், மதுரை ஆகிய இடங்களில் இருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
விழா நாட்கள் முடிந்து சொந்த ஊர்களுக்கு செல்ல திருச்சியிலிருந்து சென்னைக்கு அதிகாலை 1:00 மணி வரையிலும் அரியலுார், பெரம்பலுார், ஜெயங்கொண்டம் பகுதிகளில் இருந்து சென்னைக்கு இரவு 12:00 மணி வரை பஸ்கள் இயக்கப்படும்.
புதுக்கோட்டை, தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், காரைக்கால் வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய பகுதிகளிலிருந்து சென்னைக்கு இரவு 12:00 மணி வரையிலும், காரைக்குடி, சிவகங்கையிலிருந்து இரவு 10:00 மணி வரை, ராமநாதபுரத்திலிருந்து இரவு 9:30 வரை பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து ஊர்களின் பஸ் ஸ்டாண்டுகளில் பயணிகள் சேவை மையங்கள் இரவு, பகலாக செயல்படவுள்ளது. முன் பதிவு செய்வதால் சிரமம் இன்றி பயணிகள் கணிப்புக்கேற்ப சிறப்பு பஸ்களை இயக்க முடியும்.
அலைபேசி ஆப் மூலமாகவும், டி.என்.எஸ்.டி.சி., இணையதளம் மூலமாக முன் பதிவு செய்து கொள்ளலாம், என கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் கே.எஸ்.மகேந்திர குமார் தெரிவித்துள்ளார்.

