/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பள்ளியில் லீப் நாள் கொண்டாட்டம்
/
பள்ளியில் லீப் நாள் கொண்டாட்டம்
ADDED : மார் 02, 2024 04:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலாடி : கடலாடி அருகே நரசிங்ககூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் லீப் நாள் கொண்டாடப்பட்டது.
நான்காண்டுகளுக்கு ஒருமுறை லீப் வருடம் வருகிறது. 28 நாட்களைக் கொண்ட பிப்., மாதம் குறைவான மாதம் என கூறப்பட்டாலும் 29 நாட்களைக் கொண்ட ஆண்டை லீப் ஆண்டு என்றும் பிப்.29ம் தேதி லீப் நாள் என்றும் கூறுகிறோம்.
இதுகுறித்து மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்து ஞான வள்ளுவன் விளக்கி கூறினார். தலைமை ஆசிரியர் சேகரித்து வைத்திருந்த 300 பேனாக்களை கொண்டு பிப்.29 என வடிவமைத்து கொண்டாடப்பட்டது.

