/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
l ராமநாதபுரம் நகரில் ரோட்டில் ஆறாக ஓடும் கழிவுநீர் எப்போது விடிவு காலம் l குடிநீரில் கலப்பதால் அவதி, நிர்வாகம் படுமோசம்
/
l ராமநாதபுரம் நகரில் ரோட்டில் ஆறாக ஓடும் கழிவுநீர் எப்போது விடிவு காலம் l குடிநீரில் கலப்பதால் அவதி, நிர்வாகம் படுமோசம்
l ராமநாதபுரம் நகரில் ரோட்டில் ஆறாக ஓடும் கழிவுநீர் எப்போது விடிவு காலம் l குடிநீரில் கலப்பதால் அவதி, நிர்வாகம் படுமோசம்
l ராமநாதபுரம் நகரில் ரோட்டில் ஆறாக ஓடும் கழிவுநீர் எப்போது விடிவு காலம் l குடிநீரில் கலப்பதால் அவதி, நிர்வாகம் படுமோசம்
ADDED : டிச 17, 2025 05:25 AM

ராமநாதபுரம் மாவட்ட தலைநகரான ராமநாதபுரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் படுதோல்வி அடைந்துள்ளதால் குழாய்களில் அடைப்பு
ஏற்பட்டு வீடுகள் அருகே குளம் போல கழிவுநீர் தேங்குகிறது.
தினமலர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மூன்று மாதங்களாக காவிரி குடிநீரில் கழிவு நீர் கலக்கிறது. நிர்வாகம் படுமோசமாக நடப்பதால் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் நகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் மக்கள் தினமும் அவதிப்படுகின்றனர்.
ராமநாதபுரம் நகராட்சி 33 வார்டுகளில் 2013 முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நகரில் சேகரிக்கப்படும் கழிவு நீரை வெளியேற்ற சிதம்பரம்பிள்ளை ஊருணி, சிங்காரத்தோப்பு, குண்டூருணி, நாகநாதபுரம், இந்திராநகர் ஆகிய 5 இடங்களில் கழிவு நீரை சேகரிக்க பம்பிங் நிலையங்கள் உள்ளன.
4 இடங்களில் சேகரிக்கப்படும் கழிவு நீர் கடைசி யாக இந்திரா நகர் பம்பிங் நிலையத்திற்கு அனுப்பபட்டு, கழுகூருணியில் சாலைக்குடியிருப்பு பகுதியில் செயல்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. குழாய்கள் சேதமடைந்து, அடைப்புகள் காரணமாக கழிவுநீர் தேங்குவது வாடிக்கையாகியுள்ளது. குறிப்பாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நகரில் பல இடங்களில் ஆறாக கழிவுநீர் ஓடுகிறது.
நிர்வாகம் படுமோசம் தினமலர் நகர், பெரியார் நகர், காட்டுபிள்ளையார் கோவில் தெரு, ஐயப்பன் கோயில் செல்லும் ரோடு உள்ளிட்ட இடங்களில் தெருவில் குளம் போல கழிவுநீர் தேங்குகிறது. தினமலர் நகரில் மூன்று மாதங்களாக காவிரி குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றத்தால் மக்கள் பயன்படுத்த முடியாமல் குடிநீரை ரோட்டில் திறந்து விடுகின்றனர்.
சுகாதாரக்கேட்டால் குழந்தைகள், முதியவர்களுக்கு அடிக்கடி காய்ச்சல், வயிற்றுப் போக்கால் பாதிக்கப்படுகின்றனர். கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதால் டெங்கு அச்சத்தில் மக்கள் உள்ளனர். இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும், பெயரளவில் கழிவுநீரை உறிஞ்சு எடுக்கின்றனர். மீண்டும் அன்று இரவே குளம் போல கழிவுநீர் தேங்கி விடுகிறது. நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் மக்கள் தினமும் சிரமப்படுகின்றனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், நகரில் தினசரி பிரச்னை உள்ள இடங்களை கமிஷனர் அஜிதா பர்வின் நேரடியாக பார்வையிட்டு பாதாளசாக்கடை அடைப்பு, குழாய் சேதங்களை சரி செய்யப்படுகிறது. குடிநீர் வடிகால் வாரியத்தினர் வீடுகளுக்கு இணைப்பு வழங்கும் போது சாக்கடை குழாயை சேதப்படுத்துவதால் குடிநீரில் கழிவுநீர் கலந்து விடுகிறது. அம்மாதிரியான இடங்களை கண்டறிந்து சரிசெய்து வருகிறோம் என்றனர்.

