/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் ரூ.1.80 கோடியில் அறிவு சார் மையம்; பணிகள் ஜரூர்
/
பரமக்குடியில் ரூ.1.80 கோடியில் அறிவு சார் மையம்; பணிகள் ஜரூர்
பரமக்குடியில் ரூ.1.80 கோடியில் அறிவு சார் மையம்; பணிகள் ஜரூர்
பரமக்குடியில் ரூ.1.80 கோடியில் அறிவு சார் மையம்; பணிகள் ஜரூர்
ADDED : டிச 01, 2024 07:12 AM

பரமக்குடி : பரமக்குடி நகராட்சி சார்பில் அறிவுசார் மையத்தின் டிஜிட்டல் நுாலக கட்டட பணிகள்ரூ.1 கோடியே 80 லட்சத்தில் நடக்கிறது.
இதன் கட்டுமானப் பணிக்காக பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.
இங்கு போட்டி தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் அனைத்து வகையான புத்தகங்களும் வைக்கப்பட உள்ளன.
நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் நடக்கும் பணிக்காக ரூ.1 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. நுாலக வளாகத்தில் சிறுவர்களுக்கான நவீன வாசிப்பு அறை, பயிற்சி வளாகம், பொது வாசிப்பு அறை, இலவச வைபை வசதி, ஆன்லைன் நுாலகங்கள், கணினி அறை, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், கழிப்பறை வசதிகளுடன் கட்டப்படுகிறது.
டிஜிட்டல் முறையில் புத்தகங்கள் மற்றும் பொது அறிவு தகவல்களை திரட்டும் வகையில் செயல்பட உள்ளது. தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக வரப்பிரசாதமாக அமையும்.
பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில் விரைந்து திறப்பு விழா நடத்த வேண்டும் என போட்டித் தேர்வு எழுதுவோர், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

