/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கொடிக்கம்பங்களை அகற்ற பரமக்குடியில் விதிவிலக்கா
/
கொடிக்கம்பங்களை அகற்ற பரமக்குடியில் விதிவிலக்கா
ADDED : ஏப் 18, 2025 05:33 AM

பரமக்குடி: பொதுஇடங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற உயர்நீதிமன்றம் ஏப்.,21 கடைசி நாளாக அறிவித்தது. ஆனால் பரமக்குடியில் அனைத்து பகுதிகளிலும் கொடிக்கம்பங்கள் அகற்றப்படாமல் அணிவகுத்து நிற்கின்றன.
பரமக்குடி மற்றும் அருகில் உள்ள ஒன்றிய, கிராமப் பகுதிகளில் கட்சி, அமைப்புகளின் கொடிக்கம்பங்கள் இருக்கிறது. இவை பஸ்ஸ்டாண்ட் மற்றும் பஸ் ஸ்டாப்புகளுக்கு அருகில் இருக்கும் சூழலில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது.
தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றில் ஏப்.,21க்குள் அனைத்து கொடிக்கம்பங்களையும் அகற்ற கெடு விதித்தது. இந்நிலையில் பரமக்குடியில் நெடுஞ்சாலை ஓரம், நகராட்சி மற்றும் கிராமங்கள் தோறும் ஜாதி, மத கொடிக்கம்பங்கள் அதிகம் உள்ளன.
பார்த்திபனுார் துவங்கி சத்திரக்குடி, நயினார்கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் மற்றும்பொது இடங்களில் உள்ளது. ஆகவே நீதிமன்ற உத்தரவுப்படி பரமக்குடியில் உள்ள அனைத்து கொடிக்கம்பங்களையும்அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

